Thursday, December 29, 2011

இரயில் பாதை எங்கள் ஊரில் !


இரயில் பாதை எங்கள் ஊரில் !

இதோ இரயில் வருகிறது பாருங்க என்று ஒரு சத்தம் நானோ அங்கும் ,

 இங்கும் பார்த்தேன் அட! ஆமாம்! அது வேறெங்கேயும் இல்ல!  எங்க ஊரு 

மன்னார்குடியில் தான் !  ( சிக்கு புக்கு , சிக்கு புக்கு இரயில்  ) ... 



மன்னார்குடி - சென்னை இரயில் பாதை


எங்கள் ஊரிலிருந்து ( மன்னையிலிருந்து ) சென்னைக்கு இரயிலில்  ஏதுவாக பயணம் செல்லலாம் .

இரயில் எங்கள் ஊருக்கு வந்தது என்பது எங்களுக்கு பெருமை . 

அட அமாங்க நாங்களும் தொடர்வண்டியில் குடும்பத்துடன் , அழகான 

பசுமைநிரைந்த சோலைகளையும்  , வயல்வெளிகளையும் கண்டு மகிழ்ந்து  

செல்லுவோம் .


மன்னார்குடியிலிருந்து -  சென்னைக்கு  புறப்படும் இரயில்

" மன்னை  
to 
சென்னை "


  


Tuesday, December 27, 2011

நல்லிக்கோட்டை

நல்லிக்கோட்டை

மன்னார்குடி

 திருவாரூர்

தமிழ்நாடு

இந்தியா



மன்னார்குடி பெரியகோயில்

என்ன நல்லிக்கோட்டை

என்று தலைப்பு போட்டுவிட்டு மன்னார்குடி பெரிய கோயில்  என்ற

தலைப்பும் , கோயில்  படத்தையும்

 போட்டு இருக்கு  என்றுதானே பார்கிறிங்க ,  நல்லிக்கோட்டை என்ற

எங்கள் ஊர் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் ,  மன்னார்குடி வட்டத்தில்

அமைந்துள்ளது . எனவே முதலில் மன்னார்குடியை பற்றி பார்ப்போமா,

மன்னார்குடி

 என்றாலே நமக்கெல்லாம் ஞாபகம் வருவது ராஜகோபாலசுவாமி

    கோயில்தான் எனவே அதை முதலில் தரிசிப்போம். அதில்

ராஜகோபாலசுவாமி  மற்றும்  தேவி செங்கமலத்தாயார் சன்னதியும் உள்ளது .



மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருகோயில் முகவாயில்


இங்கு

திருவிழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும் , அதிலும் பங்குனிதிருவிழா 

தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது  ( தமிழ் மாதம் - பங்குனியிலும் ,  ஆங்கில

மாதம் - மார்ச் ( MARCH  ) / ஏப்ரல் ( APRIL )  )  இம்மாதம்  நடைபெறும் .



முகவாயில் மாலைநேரம்  

திருவிழாக்காலங்களில்  மக்கள் கூட்டம் மன்றாடும் , வீதிகளில்

அழகானா தோரணங்கள் தொங்கும் , பட்ஜி மற்றும் வடை மனம் வீசும்.

ராஜகோபாலசுவாமி திருகோயில் வடதுபுறம்

இதன் அருகில் தென்னை மரம் மற்றும் பசுமை நிறைந்த சோலைகள்

காணப்படுகின்றன . இங்கு இயற்க்கை காற்று மற்றும் பசுமை வளங்கள்

நிறைந்துள்ளது .


மன்னார்குடி பெரியகோவில் குளம் 

தெப்பக்குளத்தில் திருகோயில் கோபுர நிழல் இருக்கு பாருங்கள் , 

இக்குளம் மிகவும் அழகாக காட்சிதரும் , மிக அமைதி வாய்ந்தது 

இது அமைந்துள்ள இடம் மன்னார்குடி - நீடமங்கலம் சாலை ஓரத்தில்

மன்னை ராஜகோபாலசுவாமி திருக்கோயிலுக்கு தென்புறத்தில் அமைந்துள்ளது.


தெப்பக்குளத்தின் காட்சி



ராஜகோபாலசுவாமி திருகோயில் உட்புறம்

திருகோயில் உட்புறம் மிகவும் பழமை  வாய்ந்த அழகு பொருந்திய

இருப்பிடமாகும் .இதோ  ராஜகோபாலசுவாமி உருவம் வருகிறது பாருங்கள்


ராஜகோபாலசுவாமி சன்னதி  

இதோ தேவி செங்கமலத்தாயார் உருவம்

வருகிறது தரிசிப்போம்  வாருங்கள் . 

செங்கமலத்தாயார் சன்னதி

 மன்னை அழகுகளை ரசித்தீர்கள் , இங்கிருந்து   நல்லிக்கோட்டை என்ற ஊர் 

சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது.

அது ஒரு பசுமை நிறைந்த சோலையாக காணப்படும்  .